இன்று நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகள், உணவகங்கள் மூடல்!: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

இரண்டு நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீர் என்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு நேற்றையதினம் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவர்களின் நினைவாக இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று மூடப்படும் என்றும் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment