கட்டுப்படுத்த முடியாத காற்றுமாசு! மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல்!!

நம் இந்தியாவின் தலைநகரமாக காணப்படுகிறது டெல்லி மாநகரம். இந்த டெல்லி மாநகரத்தில் கடந்த சில வருடங்களாக காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகமாக காணப்பட்டது. இதன் விளைவாக வாகன ஓட்டிகள் பலரும் விடியற்காலையில் கூட விளக்கு எரிய பட்ட நிலையில் பயணித்தனர்.

காற்று மாசு

அவ்வாறு இருப்பினும் அவர்களுக்கு பயணம் மிகவும் சிரமமாக காணப்பட்டது. இவ்வாறு இருந்த நிலை கடந்த சில மாதங்களாக டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த தீபாவளியன்று வெடித்த பட்டாசு வகைகள் மற்றும் இதர நச்சு வாயுக்களால் மீண்டும் டெல்லி மாநகரம் முழுவதும் காற்று மாசுபாடு முன்பைவிட அதிக அளவு காணப்படுகிறது.

இதனால் தற்போது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று கூறியுள்ளார்.

நேற்று இரவு வெளியிடப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி டெல்லி மாநில முதல்வர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். நச்சுப்புகை மூடப்பட்டதால் நகரம் நகரம் பல நாட்களாக போராடி வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment