Connect with us

ஆணையம் சென்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறு-வைத்தியலிங்கம்;

VAITHIYALINGAM

தமிழகம்

ஆணையம் சென்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறு-வைத்தியலிங்கம்;

நேற்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வெளியேறினர். அதன் பின்பு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

மேலும் இது பதவியால் நடந்த காட்டுமிராண்டித்தனம் பொதுக்குழு கிடையாது என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆணையம் சென்றதாக வெளியான தகவல் அனைத்தும் தவறு என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

அதன்படி தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க சென்றதாக வெளியான தகவல் அனைத்தும் தவறானது என்று கூறியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வை ரத்து செய்துவிட்டதாக வைத்திலிங்கம் கூறினார்.

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அவைத்தலைவர் தேர்ந்தெடுத்தது செல்லாது என்றும் வாதிட்டார். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவை தலைவரை பொதுக்குழுவில் தெரிவித்துள்ளதாக வைத்திலிங்கம் வாதத்தில் புரிந்திருந்தார்.

இருபத்தி மூன்று தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறியபோது பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியும் ரத்தாகி விட்டது என்றும் அவர் கூறினார். பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியும் ரத்தானதால் நேற்று நடந்த கூட்டத்தில் அவைத் தலைவரை தேர்வு செய்தது செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு தேர்தல் நடத்தப்படவில்லை என்று பேட்டியளித்தார். ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட கூட்டினாலும் பொருளாளர் தான் கூட்ட முடியும்.

அதிமுக பொருளாளர் அதற்கான பொறுப்பை தேர்தல் ஆணையம் அளித்துள்ளதாக வைத்திலிங்கம் கூறினார். பொதுக்குழுவை கூட்டுவதாக இருந்தால் அதிமுக பொருளாளர் பன்னீர்செல்வம் கூட்ட முடியும் என்றும் வைத்தியலிங்கம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top