அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன; கிறிஸ்துமஸ் பெருவிழா முதல்வர் ஸ்டாலின்!

டிசம்பர் மாதம் என்றாலே பண்டிகை மாதமாக அமைந்துள்ளது. ஏனென்றால் வாரத்திற்கு ஒரு பண்டிகை என்ற கணக்கில் டிசம்பர் மாதம் முழுவதும் காணப்படும். அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும்.

அதற்காக தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்கள், கடற்கரைப் பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு காணப்படும். இந்த நிலையில் சென்னை சாந்தோமில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அதன்படி அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர் விருப்பம் என்று முதல்வர்  ஸ்டாலின் கிறிஸ்மஸ் பெருவிழாவில் கூறினார். அரசு மட்டுமே மக்களுக்கு அனைத்தையும் வழங்கிட முடியாது இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment