அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளும் துண்டிப்பு-ரஷ்யா அதிரடி முடிவு!
உக்ரைன் மீது போர் புரிந்து கொண்டு வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பலவும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வந்தன. அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் பரம விரோதியாக காணப்படுவது அமெரிக்க நாடு தான். இந்த அமெரிக்கா போருக்கு முன்னதாக இருந்து கண்டனம் தெரிவித்திருந்தது.
இருப்பினும் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் மீது போர் புரிந்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா அமெரிக்காவுடன் உறவை துண்டித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யா கூறியது. அமெரிக்காவுடனான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையம் உருவாக்குவதாக திட்டமிட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரேனில் இருந்து வெளிநாட்டவர் வெளியேற அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தெளிவான போர்த் திட்டங்களை வகுத்து வருகிறது என்று ரஷ்ய அமைச்சர் கூறினார். ரஷ்யக் கூட்டமைப்பின் மீது நேரடியான பாதுகாப்பு அச்சுறுத்தலை மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
