
தமிழகம்
அட்ராசக்க..! நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்கும்;;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்ததில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் அப்பள்ளியில் இருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதனை கண்டித்து நேற்றைய தினத்தில் தனியார் பள்ளியின் போராட்டக்காரர்களின் தாக்குதல் நடத்தியதை குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அப்போது இன்று தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இன்றைய தினத்தில் தமிழகத்தில் 50% மேற்பட்டவர்கள் பள்ளியின் பாதுகாப்பை கருத்தி கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் நடத்திய அந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
