Connect with us

மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Tamil Nadu

மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

chennai-dmk-leader-m-k-stalin-signs-his-nomination-papers-for-the-post-of-party-president-at-the-party-office-in-chennai-on-aug-26-2018-dmk-will-hold-a-meeting-of-its-general-council-on-august-2

கொரோனா பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தனித்தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆல்பாஸ் சலுகை கிடையாது என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது 

இந்த நிலையில் தனித் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள் ஆல்பாஸ் என சற்று முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நமது மாநிலத்தில்‌ 2021ஆம்‌ ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும்‌ விலக்களித்ததைப்‌ போல ஆகஸ்டு 2021 திங்களில்‌ நடைபெறவுள்ள பன்னிரெண்டாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுகளைத்‌ தனித்‌ தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ அனைவரும்‌ 2016ஆம்‌ ஆண்டு மாற்றுத்‌ திறனாளிகள்‌ உரிமைகள்‌ சட்டப்‌ பிரிவு 17(1)-ன்‌ அடிப்படையில்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்‌ மாணவர்கள்‌ அனைவருக்கும்‌ மதிப்பெண்கள்‌ வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையால்‌ வெளியிடப்படும்‌. மேலும்‌ மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ தாங்கள்‌ விரும்பும்பட்சத்தில்‌ இத்தேர்வினை எழுதலாம்‌ என்றும்‌ தங்களது சுய விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ தேர்வு எழுதும்‌ மாணவர்கள்‌ பின்னாளில்‌ இந்த ஆணையின்‌ அடிப்படையில்‌ தேர்ச்சி பெபற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும்‌ ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top