Connect with us

குஷியில் மாணவர்கள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!!

மாணவர்

Tamil Nadu

குஷியில் மாணவர்கள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!!

கடந்த 2 ஆண்டுகளாக நம் தமிழகத்தில் ஆல் பாஸ் முறையானது மாணவர்களிடையே சாதாரண ஒன்றாகக் காணப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் அவ்வாறு இருக்காது என்பது போல தெரிகிறது. ஏனென்றால் மே மாதம் தமிழகத்தில் பொது தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக நம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதே வேளையில் தற்போது 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது செய்முறை தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை போன்று தமிழகத்திலும் இருக்குமா என்று மாணவர்கள் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top