Connect with us

அமித்ஷாவோடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு! நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமா?

all party meeting amitshah

செய்திகள்

அமித்ஷாவோடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு! நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமா?

அமித்ஷாவோடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு! நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமா?

வருடாவருடம் தமிழகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த  அனைத்துக் கட்சிக் கூட்டம்  நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு கூடப்பட்டது.

இதில் 12 கட்சிகள் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து கட்சி குழு தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சிக்  குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது. ஏற்கனவே மூன்று முறை அமித் ஷாவை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்காத நிலையில் இன்று சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top