13 வீரர்களின் உயிரிழப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து கூட்டங்களை ரத்து செய்தார் குடியரசுத்தலைவர்!

இன்று காலை அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அது என்னவெனில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

இந்த ஹெலிகாப்டர் பெட்ரோல் விமானம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எரிந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது வரை அங்கு தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் குன்னூர் புறப்பட்டார். இவ்வாறு உள்ள நிலையில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து அடுத்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.பிற்பகல் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதோடு பாதுகாப்பான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment