அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 711 பேர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தலை கவணிக்க பிரதாப் பானு சர்மா எம்.பி இன்று சென்னை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லி-யில் இருந்து 4 பெட்டிகள் இன்று மாலை சென்னை வர இருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் உள்ளிட்ட 3பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் வருகின்ற 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சியில் 20-ம் தேதி புதிய தலைவர் பதவியேற்கிறார்.

மேலும், இன்று நடைப்பெறும் தேர்தலானது காங்கிரஸ் வட்டாரங்களில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment