
தமிழகம்
ஜூலை 18 ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு!!-அமைச்சர் பொன்முடி;
தமிழகத்தில் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஒரு சில கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறப்பு தேதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
அதன்படி ஜூலை 18ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உட்பட 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். கல்லூரிகளிலும் தொழில் கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று கூறியுள்ளார்.
