தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்! எங்கள் சாதனையை போல் எந்த ஆட்சியில் உள்ளது?
கடந்த வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
சனிக்கிழமை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது.
இவ்வாறு உள்ள நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
10 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளை போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதிமுக உறுப்பினர், பெரிய பட்டியலே வரிசைப்படுத்தி இதையெல்லாம் செய்தீர்களா என கேட்கிறார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
அதையெல்லாம் செய்து விட்டீர்களா என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கேள்வி கேட்டார். அதிமுக ஆட்சியில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். நீங்கள் என்ன கேட்டு இருக்கிறீர்களோ அதையெல்லாம் பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
