கனமழைக்கே சவால்! எந்த கனமழையையும் எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார்!

நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் அதி தீவிரம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றன. ஒரு சில பகுதிகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் சென்றுள்ளதால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு

இது குறித்து தமிழக அரசு அவ்வப்போது அறிவிப்புகளை கூறிவருகிறது. அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு  பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு கனமழை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 5103 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்ளன என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 9 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 2156 பேர் 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

நாளைய தினம் தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை நடக்க உள்ள நிலையில் இத்தகைய பாதுகாப்பு  முன்னேற்பாடுகள் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment