Entertainment
அஜித் காலில் விழுந்து ஆசி பெற்றேனா? ஆவேசம் அடைந்த அலிஷா அப்துல்லா

அஜித் காலில் விழுந்து ஆசி பெற்றதாக தன்னை பற்றி தவறான் செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்றுக்கு பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லாவுக்கு NHRACACB என்ற தேசிய மனித உரிமைகள் மற்றும் குற்ற எதிர்ப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் என்ற அமைப்பு தமிழக மாநிலத்தின் தலைவர் பதவி கிடைத்தது
இதுகுறித்து செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்று இந்த பதவி கிடைத்ததும் பதவி கொடுத்த மத்திய அரசுக்கு கூட நன்றி தெரிவிக்காமல் நேராக் அஜித் வீட்டிற்கு சென்று அஜித் காலில் விழுந்து ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்திக்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த அலிஷா, ‘இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அஜித் போன்ற மாஸ் நடிகரை அவதிக்கும் வகையில் இந்த செய்தி இருப்பதாகவும், அதில் தன்னையும் இணைத்து விமர்சனம் செய்தது மிகப்பெரிய தவறும் என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அலிஷாவின் இந்த டுவீட்டை அஜித் ரசிகர்கள் மிக வேகமாக பகிர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
