இணையத்தை தெறிக்கவிட்ட ’ஜாலியோ ஜிம்கானா’….கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து தளபதியின் அடுத்தப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்த வகையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் யூடியூப்பில் சாதனையும் படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். தளபதி பாடியுள்ள இந்த பாடல் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment