Connect with us

ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த ஆலியா பட், அனிருத்… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

junior ntr 1

பொழுதுபோக்கு

ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த ஆலியா பட், அனிருத்… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த ஆலியா பட், அனிருத்… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் டிரைலரில் இவர்களின் எனர்ஜிடிக்கான நடிப்பை பார்த்து பலரும் வியந்தனர். படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி சென்று விட்டது.

rrr glimpse

இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் கொரட்டல் சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளாராம். ஜூனியர் என்டிஆரின் 30 வது படமாக உருவாக உள்ள இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

new movie

இதுதவிர இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளாராம். அதன்படி அனிருத்துக்கு இப்படத்திற்காக, சுமார் நான்கரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனிருத் தான் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் டாப் இசையமைப்பாளராக உள்ளார்.

அந்த வகையில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத்தின் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தான் இவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படம் குறித்த மற்ற விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அடுத்தவாரம் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top