சிக்கன் டிக்கா மசாலா’-வை கண்டுபிடித்த சமையல் வல்லுநர் காலமானார்!

இந்தியாவில் உள்பட உலகம் முழுவதும் சிக்கன் டிக்கா மசாலாவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கும் நிலையில் அந்த உணவை கண்டுபிடித்தவர் இன்று காலமானதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கன் டிக்கா மசாலா உணவை கண்டுபிடித்தவர் அலி அகமது அஸ்லாம் என்பவர் பாகிஸ்தானில் பிறந்தவர். இவர் சிறுவயதிலேயே ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்றார் என்பதும் அங்கு மிகப்பெரிய சமையல் வராகி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கனை தந்தூரி அடுப்பில் வைத்து அதன் பிறகு மசாலா சேர்த்து சமைக்கும் ஒரு உணவு தான் சிக்கன் டிக்கா மசாலா. இந்த சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த அலி அகமது அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 77. இதனை அடுத்து பல சமையல் கலை வல்லுநர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிக்கன் டிக்கா மசாலா மட்டுமன்றி பல தந்தூரி உணவுகளை இவர்தான் கண்டுபிடித்தார் என்பதும் அந்த உணவுகள் இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மத்தியில் பிரபலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.