#Alert இதை பாட்டிலில் விற்க கூடாது – காவல்துறையினர் திடீர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் முதலானவற்றை பாட்டில் மற்றும் கேன்களில் கொடுக்கக் கூடாது என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்படும் குற்ற சம்பவம் அரங்கேறி வருவதனால் போலீசார், அதிவிரைவு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேபோல் பெட்ரோல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஈரோடு, ராமநாதபுரம், சத்தியமங்கலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் முதலியவற்றை பாட்டில் மற்றும் கேன்களில் கொடுக்கக் கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வாகன ஓட்டிகள் அதுபோல பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்து வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் மூலமாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment