அடுத்த 2 மணி நேரத்திற்கு..19 மாவட்டங்களில் அலர்ட்!!

வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருநெல்வேலி காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.