தீவிரமடையும் கனமழை! தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காதல் திருமணம்! நடு ரோட்டில் தாய் செய்த செயலால் பரபரப்பு..!!

இதனை தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜோதிடத்தால் விபரீதம்! காதலன் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி..!!

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment