தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல்: இரண்டு கட்டங்களாக அறிவிப்பு!

அதே போல் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment