தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழக காவல்துறை அனுமதி!

அதே போல் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கமானது வருகின்ற 4-ஆம் தேதி வரையில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவி சத்யாவின் மரணம்: தோழிகளிடம் ரகசிய வாக்குமூலம்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment