20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல்! “மதர் டெய்ரியில் பால் விலை ரூ.2 உயர்வு”… !!

இதனிடையே நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முடிவுக்கு வரும் புரட்டாசி: காசிமேட்டில் குவியும் மீன் பிரியர்கள்..!!!

இதனை தொடர்ந்து 17,18 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரைக்கும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment