15 மாவட்டங்களுக்கு அலெர்ட்!! – வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!!!

நாளைய தினத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதே போல் கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த பைக் வீட்டின் சுவற்றின் மீது மோதி விபத்து!!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment