#Alert வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிச.23,25ல் நடக்கப்போவது என்ன?

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் தென் கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.