“தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு” மட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம் !!

d8650288fff74d496062932c4705ad2f-2

தற்போது நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை மக்களிடையே தடுப்பூசி மீது நம்பிக்கை வந்ததை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அதிகபட்ச தடுப்பூசி ஆனது நீலகிரி ,தென்காசி மற்றும் பல மாவட்டங்களில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றே கூறலாம்.7766961b5a742f70b266e68d6f50417d-1

இந்நிலையில் தற்போது அந்த மாவட்ட ஆட்சியர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபான விற்பனை இல்லை என்று அந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட மக்களின் 97 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத எஞ்சிய 3 சதவீதம் பேரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment