குழந்தைகள் சாப்பிடுகின்ற ஐஸ்கிரீம்ல மதுவா? விற்ற கடைக்கு அதிரடி சீல்!

நாட்டில் நாளுக்கு நாள் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மது பிரியர்கள் பலரும் புதிது புதிதாக அந்த மதுவினை கலந்து உட்கொள்வர். இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகள் சாப்பிடுகின்ற ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்

கோவையில் மதுபானம் கலந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு அதிகாரிகள் பரிசோதித்து சீல் வைத்தனர். கோவை அவினாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவருகிறது ரோலிங் டாப் கேப் ஐஸ்கிரீம் கடை.

இந்த கடையில் தான் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து ஐஸ்கிரீமை பரிசோதனை செய்ய அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அமைச்சர் மா சுப்பிரமணியனின் உத்தரவை அடுத்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அந்த கடையில் சோதனை செய்தார். ஐஸ்கிரீமை சோதித்ததில் அதில் மதுபானம் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஐஸ்க்ரீம் தயாரிக்க தரமற்ற நீரும், கெட்டுப் போன உணவு பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரக்கேடு ஏற்படும் அளவுக்கு ஐஸ்க்ரீம் தயாரிக்க இடமும் அசுத்தமாக இருந்ததை அதிகாரிகள் கண்டு உறுதிப்படுத்தினர்.

மதுபானம் கலப்பு, கெட்டுப்போன உணவுப் பொருட்களை பயன்படுத்தியது உறுதியானதால் ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்தனர். ஐஸ்கிரீம் கடையிலிருந்து மதுபான பாட்டில்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment