Connect with us

சீறிப்பாய்ந்த காளைகள்-கம்பீரத்தோடு களத்தில் மாடுபிடி வீரர்கள்! இனிதே நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு;

ஜல்லிக்கட்டு

செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்-கம்பீரத்தோடு களத்தில் மாடுபிடி வீரர்கள்! இனிதே நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு;

சீறிப்பாய்ந்த காளைகள்-கம்பீரத்தோடு களத்தில் மாடுபிடி வீரர்கள்! இனிதே நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு;

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி வரிசையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி வரிசையாக நடைபெற்று முடிந்தது. மஞ்சுவிரட்டு போட்டிகளும் ஆங்காங்கே நடைபெற்றது.

அந்த வரிசையில் தமிழகத்தில்  மிகவும் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ராம் இரண்டாமிடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கிய சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.

இதில் திமுக இளைஞர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக அளித்துள்ளார். அதோடு மாடுகளை நன்றாகப் பிடித்தவர்களுக்கு தங்க காசுகளையும் அவர் அளித்துள்ளார். இந்த ஆண்டு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1020 காளைகள் களமிறங்கின.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top