அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறப்பாக விளையாடிய தஞ்சாவூர் காளைக்கு தங்க மோதிரம்!

இன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உறவினர்கள், நண்பர்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வர். அதே வேலையில் தமிழகத்தில் ஒருபுறத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

குறிப்பாக மிகவும் பிரபலமாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 1000 காளைகள் இன்று ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்கப்பட்டுள்ளன. சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும் தகுந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய காளைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக தனது ஆக்ரோஷ விளையாட்டை காட்டிய தஞ்சாவூர் காளைக்கான தங்க மோதிரத்தினை அந்த காளையின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பொறித்த தங்க மோதிரம் காளை உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.