ஐபிஎல் புதிய அணிகள் எவை எவை? சுவாரஸ்யமான தகவல்கள்!

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அந்த அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

புதிதாக உருவாகவிருக்கும் அணிகள் எந்த நகரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு நகரங்களை மையமாக கொண்டு உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அணிகளை ஏலம் எடுக்க பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு வருவதாகவும், அவர்களில் தீபிகா படுகோனே, மான்செஸ்டர் யுனைடெட், அதானி குழுமம் உள்பட பல நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதிதாக உருவாகும் இரண்டு அணிகள் உள்பட மொத்தம் உள்ள 10 அணிகளுக்கும் புதிய வீரர்கள் புதிதாக ஏலம் மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் ஒவ்வொரு அணியும் தங்கள் ஏற்கனவே வைத்துள்ள மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் பிசிசிஐ புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print