News
“மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது” எனக் கூறும் அழகிரி!
வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியானது திமுகவுடன் கூட்டணியில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதலில் 41 தொகுதிகள் கேட்ட நிலையில் தற்போது திமுக 25 தொகுதிகளை கொடுத்துள்ளனர்.

இதனால் காங்கிரஸ் தரப்பில் மிகவும் வருத்தத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான அழகிரி “மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது” என்றும் கூறுகிறார்.
மேலும் அவர் ஒவ்வொரு முறையும் குறைவான இடங்களே கிடைப்பதாகவும் கூறுகிறார். இதனால் அடுத்த முறை கூட்டணிக்கு வாய்ப்பு இருக்காது எனவும் அவர் கூறுகிறார்.
