பார்த்திபன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற அழகி படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா?

பார்த்திபன் , நந்திதா தாஸ் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. இந்த படம்தான் தமிழில்  80ஸ் நினைவுகளை தாங்கி வந்த திரைப்படம் என தாராளமாக கூறலாம்.

இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. பின்னணி இசையும் அருமையாக இருந்தது.

நமது  ஞாபகத்தை பின்னோக்கி பார்க்கும் ஒரு படமாகவும் சிறுவயது நினைவுகளை சுவையாக அசை போடும் நினைவுகளை கொண்ட படமாகவும் இது இருந்தது.

இந்த படத்தின் அசுர வெற்றி தமிழ் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அழகி படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒளிப்பதிவாளராக இருந்த தங்கர்பச்சான் இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராகவும் தெரிந்தார்.

இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்த நிலையில் இப்படம் பற்றி பார்த்திபன் கூறியுள்ளதை பார்த்தால் படத்தின் 2 பாகம் வருவதை பார்த்திபன் விரும்புகிறார் போலும்.

சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் திரு தங்கர்.ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! வரும் என பார்த்திபன் கூறி இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment