பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி: சுற்றி வளைத்து கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்..!

பெங்களூரை நகரில் அல்-கொய்தா தீவிரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் என்பதும் இந்த இயக்கத்திடம் தொடர்புடையவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பெங்களூர் நகரில் அதிரடி சோதனை செய்ததில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே அவர் அல்கொய்தா நிறுவனத்திற்காக வேலை செய்ததாகவும் அவரது பெயர் ஆரிப் என்றும் முதல் கட்ட விசாரணை தெரிவித்துள்ளது. பயங்கரவாத இயக்கத்துடன் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வழியே தொடர்பு இருந்துள்ளதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அவர் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரில் வேறு ஏதேனும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணை அவரிடம் நடந்து வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.