Connect with us

விமான அதிகாரியாக தல அஜித்!.. லீக்கான AK61 அப்டேட்!..

ajith 2

Entertainment

விமான அதிகாரியாக தல அஜித்!.. லீக்கான AK61 அப்டேட்!..

வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் வலிமை. கடந்த பிப்ரவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது இருப்பினும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அந்த படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத் இணைந்துள்ளனர். இதில் அஜித் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ak61 big update ajith gives sneak peek into new stylish look for upcoming project

இப்படத்திற்கு ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது மற்ற மொழிகளிலும் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பிரமாண்டத்தை உருவாகி வருவதாக தகவல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது படமாக்கப்பட்டு வரும் திரைப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கை வண்ணத்தில் உருவான கதை தான். எந்தவித சமரசமும் இல்லாமல் முழுக்க முழுக்க இயக்குனர் வினோத் கை வண்ணத்தில் உருவாக்கபடுகிறது.இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது அந்த நம்பிக்கையை எதிர்பார்ப்பாக மாற்றும் வண்ணம் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

thala 61 update

தற்போது வெளியான தகவலின்படி ஹைதராபாத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடை பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்ல ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தல அஜித் குமார் அவர்கள் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவர் பயணித்த விமானத்தின் பைளைட்டுகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் தல அஜித் தனி விமானத்தில் சென்றாரா அல்லது படத்தில் விமான அதிகாரியாக நடிக்கிறாரா எந்த சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த புகைப்படத்தால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top