
பொழுதுபோக்கு
ஏகே 61 சூட்டிங் – அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப் !! மாஸ் லுக் !!
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. வசூல் சாதனையும் தட்டியது. அதை தொடர்ந்து Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் மூன்றாம் முறையாக ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார்.’ஏகே 61′ ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை 10கிலோ குறைத்ததாகவும் கூறப்படுகிறது.ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் வில்லனாக ஜான் கொக்கின் நடிக்கயுள்ளார்
இப்படம் குறித்த தகவல் ஒன்று அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது . அதன்படி ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும்.
#Ajithkumar Anna recent pics ❤️????????#Ajithkumar???? #Ak61 pic.twitter.com/XU1Gqkjgo5
— அடங்காத அஜித் குருப்ஸ்-வத்(தல)க்குண்டு (@AAG_bloods) May 17, 2022
மேலும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணிகள் சரியாக நடைபெற்றால் ஏகே 61 படம் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதற்க்கு இடையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் அஜித் வெள்ளை சண்டை அணிந்து வந்து மாஸாக போஸ் கொடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது
