நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
படத்தின் ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.
மேலும் அஜித் அண்மைக்காலமாக அவர் நடிப்பில் வரும் படங்களுக்கு ‘V’- என்ற எழுத்து முதன்மையாக கொண்டு டைட்டில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சான்றாக வீரம் , விவேகம், வேதாளம் ,வலிமை ,விஸ்வாசம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. தற்போழுது அவர் நடித்து வரும் படத்திற்கும் ‘V’- என்ற எழுத்தில் தொடங்கும் வாரத்தில் டைட்டில் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த்தனர்.
இந்நிலையில் ஏகே 61 படத்தின் டைட்டில் நாஸான தகவல் தற்போழுது கசிந்து வந்துள்ளது.படத்தின் தலைப்பு ‘துணிவே துணை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை நடிகர் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதே டைட்டிலில் முன்னதாக 46 ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த திரைப்படம் ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.