அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர்: வெளியான மாஸ் வீடியோ!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார்.

அந்த வகையில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான படம் துணிவு. இந்த படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதனிடையே வெளிநாடுகளில் படத்தினை வெளியிடும் உரிமையை லைகா புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளா’ மற்றும் ‘கேங்க்ஸ்டா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி பம்பர் ஹிட் கொடுத்தது.

இன்று மாலை துணிவு படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.