அஜித்தின் ‘துணிவு’ திரைப்பட டிரைலர் யூடியூபில் டிரெண்ட்!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நேர்க்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் மீண்டும் நடிகர் அஜித்துடன் கூட்டணி சேர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அதே போல் சமுத்திர கனி, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ajith 1

வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே போல் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இந்த சூழலில் நேற்றைய தினத்தில் மாலை 7 மணியளவில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

AJITH THU

தற்போது யூடியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.