அஜித்தின் துணிவு படத்தை துணிவுடன் தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

நடிகர் அஜித் சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் போனிகபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார்.

அஜித்தின் 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்அதை தொடர்ந்து இரண்டாவது லுக்கும் வெளியானது.

thunivu movie updatenews360

இந்நிலையில் இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு கதை அமைவதால் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது நாம் அறிந்ததே, தற்போழுது படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, அதை தொடர்ந்து 3வது லுக் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாவது போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடும் தேதியை படக்குழு அக்டோபர் மாதத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் – அதிதி நடிக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி உரிமை வாங்கிய முன்னணி நிறுவனம்!

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது .

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment