அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்! துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது தெரியுமா?

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு, சமீபத்தில் துணிவு திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன

துணிவு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

திருநெல்வேலி ஸ்பெஷல் மாங்காய் சாம்பார்! இனி நம்ம வீட்டிலையும்.. மிஸ் பண்ணாதீங்க!

1987ஆம் ஆண்டு பஞ்சாபில் சிங் தலைமையில் வங்கியில் இந்திய அளவில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது கொலை சம்பவத்தின் வழக்கின் தீர்ப்பு கடந்த 2009-ம் ஆண்டுதான் வெளியானது இச் சம்பவத்தை மையமாக வைத்து துணிவு திரைப்படம் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் அடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி!

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு வருகிறார் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.