Connect with us

பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கும் அஜித்தின் துணிவே துணை! ரிலீஸ் எப்போ தெரியுமா?

ajith trip-7

பொழுதுபோக்கு

பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கும் அஜித்தின் துணிவே துணை! ரிலீஸ் எப்போ தெரியுமா?

நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு கதை அமைவதால் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது . இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

AK61 படத்தின் புதுப்பிப்புக்காக அஜீத் குமாரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் தலைப்பாக துணிவே துணை இறுதி செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் இமயமலை பைக் பயணத்தை அஜித் முடித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது, அதை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போழுது AK61 படத்தின் படக்குழு வெளிநாடு பயணத்தை தொடங்கியுள்ளது.ஸ்டண்ட் காட்சிகளுக்காக படக்குழு பாங்காக் செல்கிறது. ஆனால் அஜித் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வில்லை, ஒரு வார இடைவேளைக்கு வேலைக்கு பிறகு கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ajith trip - 6

படத்தின் ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் 5 நாள் வசூல் தெரியுமா? அடித்து தள்ளும் வசூல்!

AK61 Ajith HVinoth Start Date Release Date Plot Story Cast Budget

AK61 படம் முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது , எதிர்பாராத காரணத்தினால் அது தள்ளி போக இந்த வருட இறுதியில் வெலிவியாவதாக இருந்தது, சமீபத்தில் விஜயின் வாரிசு படமும் அஜித்தின் 61வது படமும் 2023 ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் உலாவியது.

இந்நிலையில் அஜித்தின் ஏகே-61 திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ வெளியாகும் எனக் கூறப்படுகிறது. உறுதியான தகவல் வெளியாகும் வரை காத்திருக்கவும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top