பொங்கல் ரிலீசுக்கு வாரிசுடன் மோத உள்ள அஜித்தின் துணிவு.. உதயநிதி எடுக்கும் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி போட்டி நடிகர்களாக வளம் வருபவர் விஜய் மற்றும் அஜித். இருவரும் தனக்கான தனி தனி ரசிகர் பட்டாலத்தையே கொண்டுள்ளனர். நடிகர் விஜய் தற்போழுது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.படப்பிடிப்பு இறுதி ஷெட்யூல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

vaarisu

அதை தொடர்ந்து நடிகர் அஜித் சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் போனிகபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார்.

அஜித்தின் 61 படத்தின் அப்டேட்காக படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்அதை தொடர்ந்து இரண்டாவது லுக்கும் வெளியானது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகிவருகிற்து.

அஜித்தின் துணிவு படத்தை துணிவுடன் தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

இந்நிலையில் அதில் எந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து ரிலீஸில் இருந்தாலும் அது ஒரே நாளில் வெளியாகி மாஸ் காட்டுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment