இந்தியா முழுக்க அஜித்தின் பைக் பயணம்… ரூட் மேப் குறித்து அப்டேட் !

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து தற்காலிகமாக ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கினார்.இந்நிலையில் மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன் சண்டிகரில் இருந்து தன்னுடைய பைக் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.

ajith trip-7

இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு சென்ற அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு இமயமலையை சுற்றி வருகிறார். கன்னி லடாக் மலைத்தொடர்களில் அஜீத் குமாரின் பரபரப்பான பைக் பயணத்தில் மஞ்சு வாரியர் அவர்களுடன் இணைந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி இணையத்தை உலுக்கி வருகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் வில்லியா? எதிர்பார்க்காத ஷாக்கிங் நியூஸ் !

ajith trip -5

ajith trip-2

இந்நிலையில் சண்டிகரில் இருந்து குலுமணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இடங்கள் வழியாக பயணித்து கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய ஸ்தலங்களில் தரிசனம் செய்து பயணத்தை முடித்தார். அதன் பின் இந்தியாவின் சில இடங்களுக்கு அவர் பயணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் வில்லியா? எதிர்பார்க்காத ஷாக்கிங் நியூஸ் !

மேலும் அடுத்த ஆண்டு தன்னுடைய வெளிநாடுகளுக்கான பைக் பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகயுள்ளததாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment