அஜித் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.கலவையான விமர்சனங்களை பெற்று அஜித் ரசிகர்களை வருத்தத்தில் இருந்தலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது ஆறுதலாக இருந்தது.
இதை தொடர்ந்து அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு சில நாட்களின் முன் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்.ஏ கே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.படம் முழுவதும் நடிகர் வீரா,அஜித்துடன் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.படத்தின் கதைக்களம் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிவதாகவும்,இந்த தீபாவளிக்கு விருந்தாக படம் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் கதைக்களம் குறித்து எச்.வினோத் நேர்காணலில் சொல்லியிருப்பார்.
விஜய் – லோகேஷ் கூட்டணியில் அடுத்த வில்லனாக மாறும் ஹீரோ யாரு தெரியுமா?