Connect with us

அஜித் 62வது படத்தில் நயன்தாராவை தவிர்த்த விக்னேஷ்! அப்போ ஹீரோயின் யார் தெரியுமா.?

ajith 62

பொழுதுபோக்கு

அஜித் 62வது படத்தில் நயன்தாராவை தவிர்த்த விக்னேஷ்! அப்போ ஹீரோயின் யார் தெரியுமா.?

அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து ‘அஜித் 61’ படத்தை உருவாக்கியுள்ளனர்.இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிவருகிறது.

இப்படத்தினை வரும் டிசம்பர் மாதம் அல்லது பொங்கலுக்கு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இதன் படப்பிடிப்பை நவம்பரில் துவக்க உள்ளனர்.

ajith 62 1

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் ,வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தின் கதைக்களம் இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார்.

maxresdefault 2

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் முடிந்த பிறகு அந்த முடிவு மாறியுள்ளார். அதாவது நயன்தாரா வேண்டாம் வேறு நடிகை ஒப்பந்தம் செய்யலாம் என விக்னேஷ் சிவன் முடிவு எடுத்துள்ளாராம்.

nayan samant

ராத்திரி எங்கேயாவது போனியா? பிரியா பவானி சங்கரை பார்த்து கேட்ட நபர்!

தற்போழுது சமந்தா தான் அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக்க தகவல் வந்துள்ளது. அதன்பின் AK 62 படத்தின் படப்பிடிப்பு October மாதம் துவங்க,அதன்பின் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை ஒரே வீச்சில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து படத்தை வருகிற 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top