மனைவி, மகளுடன் ‘பீஸ்ட்’ படம் பார்த்த அஜித்… இப்படியொரு காரணம் இருக்கா?
நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இன்று சத்யம் திரையரங்கில் பார்த்துள்ளனர்.
விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீசானது. இந்த படம் முதல் நாள் வசூலிலேயே வலிமை படத்தின் முதல் நாள் வசூலை வீழ்த்தி விட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பீஸ்ட் படத்தை பார்த்ததாகவும் பாதியிலேயே எந்த கமெண்ட்டும் சொல்லாமல் எழுந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று தல அஜித் குடும்பத்துடன் சென்று பீஸ்ட் படத்தை கண்டு ரசித்துள்ளார்.
அஜித் குடும்பத்தினர் இன்று சென்னை சத்யம் தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்துள்ளனர். அஜித்தின் மனைவி ஷாலினி, அவரின் மகள் ஆகியோர் தியேட்டருக்கு வந்து, ரசிகர்களுடன் சேர்ந்து பீஸ்ட் படம் பார்த்துள்ளனர்.
அஜித்தின் மகள் அனோஷ்கா தளபதி விஜய்யின் தீவிர ரசிகையாம். அதனால் தான் அஜித் மகள் அனோஷ்கா மற்றும் மனைவி ஷாலினியுடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
