அஜித் விஜய் இப்படித்தான் இருப்பார்கள்… ஓப்பனாக கூறிய காமெடி நடிகர்….!

கோலிவுட்டில் ரஜினி கமலை அடுத்து இரண்டு டாப் நடிகர்கள் என்றால் அது விஜய் அஜித் தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் எனும் அளவிற்கு மிக முக்கியமான நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அஜித் விஜய்

படங்களில் இவர்கள் ஹீரோ என்பதை தாண்டி நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களுடன் பணிபுரிந்த பலர் கூறியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது அஜித் விஜய் இருவருடனும் இணைந்து நடித்த பிரபல காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் இவர்கள் இருவர் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மொட்டை ராஜேந்திரன்

அதன்படி மொட்டை ராஜேந்திரன் கூறியதாவது, “அஜித்தை பார்த்து நாம் எழுந்தால் அவர் நம்மை உக்கார வைப்பார். ஏன் என்னைப் பார்த்து எழுந்திருக்கிறீர்கள்? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? உக்காந்து பேசுங்க என்பார். குடும்பத்தில் உள்ளவர்களை நலம் விசாரிப்பார்.

ஓரிடத்தில் உட்காராமல் அவுத்துவிட்ட கன்னுக்குட்டி மாதிரி ஓடிக்கொண்டே இருப்பார். அவருடன் ஆசை படத்திலேயே இணைந்து நடித்திருக்கிறேன். அதை வேதாளம் படத்தில் நடிக்கும்போது அஜித்திடம் கூறினேன். அவர் ஆச்சரியப்பட்டார்” என கூறியுள்ளார்.

மேலும் விஜய் குறித்து பேசியபோது, “ஒரு குடும்ப உறுப்பினர் போல விஜய் நடந்துகொள்வார். நாம் ஏதும் தவறு செய்தால் அதை சரி செய்வார். என்னை மாதிரி விஜயும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்” என கூறியுள்ளார். விஜய் அஜித் குறித்து காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment