சின்ன வயதில் ரசித்த அஜீத்துடன் நடிப்பேன் என நினைத்ததில்லை- வலிமை வில்லன் கார்த்திகேயா

அஜீத் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வர இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா.

இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அஜீத்தின் வலிமை படத்தில் இவர் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படம் தெலுங்கிலும் வெளியாகும் நிலையில் இப்படத்தில் அஜீத்துடன் நடித்த தன் அனுபவங்களை சுருக்கமாக பகிர்ந்துள்ளார் கார்த்திகேயா.

சின்னவயதில் இருந்தே அஜீத்தின் படத்தை பார்த்திருக்கிறேன் அவருடன் நடிப்போம் என கனவிலும் நினைத்ததில்லை அவருடன் சேர்ந்து போஸ்டரில் இருப்போம் என நினைத்ததில்லை எனவும் கூறியுள்ளார் கார்த்திகேயா.மேலும் தெலுங்கு படத்திற்கான போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment