இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் ஊர் சுற்றும் அஜித் ! எப்போ எங்க தெரியுமா?

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து தற்காலிகமாக ‘AK61’ என்ற தலைப்பு கொண்ட படத்தின் தனது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த திரைப்படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தனது ஐரோப்பா பயணம் மற்றும் துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பை முடித்த பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் ‘AK61’ படப்பிடிப்பைத் தொடங்கினார். இப்போது, தயாரிப்பாளர்கள் வைசாக் அட்டவணையை முடித்துள்ளனர். சமீபத்திய ஷெட்யூலில் சில தீவிரமான அதிரடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

NTLRG 20220829102543070796

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜீத் குமார் ஜோடியாக மஞ்சு வாரியருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத் ஷெட்யூலில் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் அஜித் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு சென்ற அஜித்,தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டு 4 நாட்கள் இமயமலையை சுற்றி வருகிறார்.

newproject86 1661668727

சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் சமீபத்திய காதல் புகைப்படம்! என்ன ஸ்பெஷலா இருக்கும் ?

இதில் அஜித் ஓட்டும் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தில் அஜித் பேசும் பன்ஞ் டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் TN07CU2577 என்ற எண் கொண்ட பைக்கை ஓட்டி வருகிறார். இது சென்னை தெற்கில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது.AJITH KUMAR என்ற பெயரில் 2019-11-22 அன்று இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது என்பது தெரிய வந்துள்ளது இந்த பைக்கின் இன்சூரன்ஸ் 2020-11-12 அன்று முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் முடிந்த பின் இன்சூரன்ஸை மீண்டும் புதுப்பிக்கவில்லை என்று ஆவண தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment